மதுரையில் கனிமவளத்துறை அதிகாரி என கூறி மிரட்டி பணம் பறித்த போலி நிருபர் - கைது செய்து சிறையில் அடைப்பு

Sep 18 2021 11:07AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில் கனிமவளத்துறை அதிகாரி என கூறி மிரட்டி பணம் பறித்த போலி நிருபரை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

மதுரை மாவட்டம் வெள்ளையம்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராமநாதன் என்பவர், அப்பகுதியில் மணல் திருட்டு நடைபெறுவதாக கூறி அங்கு நின்ற ஜேசிபி, லாரிகளை சிறைபிடித்துள்ளார். தன்னை, கனிமவளத்துறை அதிகாரி எனவும், உடனே காவல்நிலையம் வாருங்கள் என லாரி உரிமையாளர்களை மிரட்டி 50 ஆயிரம் ரூபாய் தந்தால் லாரிகளை விடுவிப்பதாக மிரட்டியுள்ளார். இதனால் பயந்துபோன மணல் கொள்ளையர்களிடம், 22 ஆயிரம் ரூபாயை மிரட்டி பறித்துவிட்டு அங்கிருந்து தப்பி செல்ல முயன்றார். அந்த வாலிபர் மீது சந்தேகம் கொண்ட மணல் கொள்ளையர்கள், அவர் குறித்து பாலமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், உடனடியாக அந்த வாலிபரை மடக்கிபிடித்து விசாரணை செய்தபோது, கனிமவளத்துறை அதிகாரி எனக் கூறி மிரட்டி பணம் பறித்ததும், போலி நிருபர் அடையாள அட்டை வைத்திருந்ததும் தெரியவந்தது. மேலும், பல இடங்களில் மிரட்டி பணம் பறித்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து, ராமநாதனை கைது செய்த போலீசார், அவரின் இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையிலடைத்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00