ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு பெண் குழந்தைகளுக்‍கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு - முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவு

Sep 18 2021 11:12AM
எழுத்தின் அளவு: அ + அ -
ஸ்ரீவில்லிபுத்தூரில் இரண்டு பெண் குழந்தைகளுக்‍கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் முன்னாள் ராணுவ வீரருக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மாவட்ட போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள போடுரெட்டியபட்டியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் நடராஜன் என்பவர், கடந்த 2016ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள 6 மற்றும் 7 வயதுள்ள சிறுமி இருவரை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து நடராஜனை தேடி வந்தனர். இதனையடுத்து, நடராஜன் நீதிமன்றத்தில் சரணடைந்தார். ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.

இந்நிலையில், நேற்று நவழக்கு விசாரணை முடிவில், நடராஜனுக்கு 60 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி திரு. தனசேகரன் தீர்ப்பளித்தார். நாட்டைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த முன்னாள் ராணுவ வீரருக்‍கு, பாலியல் புகாரில் 60 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சம்பவம் பொதுமக்‍களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00