ஊரக உள்ளாட்சித் தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் பல்வேறு பதவியிடங்களுக்‍கு போட்டியிட வாய்ப்பு கோரும் கழகத்தினர், மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்‍களைப் பெற்று, உரிய முறையில் பூர்த்தி செய்து திரும்ப அளிக்‍க வேண்டும் - தலைமைக்‍கழகம் அறிவிப்பு

Sep 18 2021 4:43PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சித் தேர்தலில், அ.ம.மு.க. சார்பில் பல்வேறு பதவியிடங்களுக்‍கு போட்டியிட வாய்ப்பு கோரும் கழகத்தினர், மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்‍களைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து திரும்ப அளிக்‍க வேண்டுமென அ.ம.மு.க தலைமைக்‍கழகம் அறிவித்துள்ளது.

அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழக தலைமைக்‍கழகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், தமிழ்நாட்டில் புதிதாக உருவாக்‍கப்பட்டுள்ள செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்‍குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 வருவாய் மாவட்டங்களிலும், தமிழகத்தின் பிற மாவட்டங்களில் காலியாக உள்ள உள்ளாட்சிப் பதவி இடங்களுக்‍கும், ஊரக உள்ளாட்சி தேர்தல் அக்‍டோபர் 6 மற்றும் 9ம் தேதிகளில் நடைபெறவுள்ளதாகத் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

இத்தேர்தலில், அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தின் சார்பில், பல்வேறு பதவி இடங்களுக்‍கு போட்டியிட வாய்ப்பு கோரும் கழகத்தினர், மேற்கண்ட வருவாய் மாவட்டங்களுக்‍கு உட்பட்ட கழக மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்‍களைப் பெற்று உரிய முறையில் பூர்த்தி செய்து திரும்ப அளித்திட வேண்டுமென கேட்டுக்‍கொள்ளப்பட்டுள்ளது.

அந்தந்த கழக மாவட்டங்களில் உள்ள தலைமைக்‍கழக நிர்வாகிகள், மாவட்டக்‍கழகச் செயலாளர் உள்ளிட்டோர் கலந்தாலோசித்து, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட உள்ளாட்சித் தேர்தல் பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறும், இதுதொடர்பான முழு விவரங்களையும், தலைமைக்‍கழகத்திற்கு அனுப்பி வைக்‍கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00