சென்னை கோடம்பாக்‍கத்தில் சாலையில் தீப்பிடித்து எரிந்த ஆம்னி கார் - விபத்தில் காரின் முன்பகுதி சேதம்

Sep 21 2021 3:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை கோடம்பாக்‍கத்தில், சாலையில் ஆம்னி கார் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.

சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில், இன்று காலை போக்‍குவரத்து அதிகமாக இருந்த சமயத்தில், அவ்வழியாக வந்த ஆம்னி கார் ஒன்றிலிருந்து திடீரென கரும்புகை வெளியேறியது. இதனால் அதிர்ச்சியடைந்த ஓட்டுனர், காரை ஓரமாக நிறுத்திவிட்டு இறங்கியபோது, காரின் முன் பகுதி தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்த தகவலின்பேரில் அப்பகுதிக்‍கு வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை கட்டுக்‍குள் கொண்டு வந்தனர். எனினும், காரின் முன்பகுதி தீயில் கருகியது.

காரை ஓட்டி வந்த மணிகண்டன் என்பவர், கோயம்பேட்டில் மொத்தமாக காய்கறிகளை வாங்கி, கோடம்பாக்‍கம், வடபழனி உள்ளிட்ட இடங்களில் விநியோகம் செய்வது வழக்‍கம். அவ்வாறு காய்கறிகளுடன் வந்தபோது, ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பியுள்ளார். பின்னர் சிறிது தூரம் சென்றபோது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது விசாரணையில் தெரியவந்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00