மேலூர் அருகே 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த வாலிபர் : மேலும் ஒரு பெண்ணை 3-வது திருமணம் செய்ய முயற்சி

Sep 21 2021 4:21PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை மாவட்டம், மேலூர் அருகே ஏற்கனவே 2 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்த நிலையில், 3-வதாக மற்றுமொரு பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்ய முயன்ற நபரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலூர் அடுத்துள்ள நாவினிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த தனபாலன் என்பவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு உசிலம்பட்டியை சேர்ந்த பாலலட்சுமி என்ற பெண்ணை திருமணம் செய்துள்ளார். இருவரும் உசிலம்பட்டியிலேயே வசித்து வந்த நிலையில், தன்னுடன் பணியாற்றிய பெண்ணிடம் தனது முதல் திருமணத்தை மறைத்து, தனபாலன் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தற்போது இரு மனைவிகளுக்கும் தெரியாமல், தனபாலனுக்கு 3-வது திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர் முயற்சி செய்ததை தொடர்ந்து, முதல் மனைவி பால லட்சுமி, உசிலம்பட்டி மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இப்புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, தனபாலனிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00