ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் - மனுத்தாக்கல் செய்ய குவியும் வேட்பாளர்கள்

Sep 21 2021 4:41PM
எழுத்தின் அளவு: அ + அ -
9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் வேட்புமனுத் தாக்கல் நாளை நிறைவு பெறுகிறது. இதனால், வேட்பாளர்கள் வேட்பு மனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் அடுத்த மாதம் 6 மற்றும் 9-ம் தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் தற்போது நடைபெற்று வருகிறது. வேட்பு மனு தாக்கல் செய்ய நாளை கடைசிநாள் என்பதால், மனுத்தாக்கல் செய்வதில் வேட்பாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்து 14 ஆயித்து 952 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், 9 ஊராட்சி ஒன்றியங்கள் உட்பட 3 ஆயிரத்து 773 பதவியிடங்களுக்‍கு வேட்பு மனுத் தாக்‍கல் தொடங்கி நடைபெற்று வருகிறது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், கல்வராயன்மலை, ரிஷிவந்தியம், தியாகதுருகம் உள்ளிட்ட 9 இடங்களில் உள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனுக்கள் பெறப்படுகின்றன.

இந்நிலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய நாளை கடைசி நாள் என்பதால், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இன்று ஒரே நேரத்தில் ஏராளமானோர் வேட்பு மனு தாக்கல் செய்ய குவிந்தனர். இதனால் வேட்பு மனு பெறப்படும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் கூட்ட நெரிசல் ஏற்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையசீவரம் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிடும் திருமதி D.கலைச்செல்வி தேவராஜ், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், தேர்தல் நடத்தும் அலுவலரும், வட்டார வளர்ச்சி அதிகாரியுமான திரு.ராஜ்குமாரிடம் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

செங்கல்பட்டு மாவட்டம் பரங்கிமலை ஒன்றிய அலுவலகத்தில், உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்புமனு தாக்‍கல் நடைபெற்றது. பரங்கிமலை ஒன்றியத்துக்கு உட்பட்ட முடிச்சூர், பொழிச்சலூர் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்‍கு, அம்மா மக்கள் முன்னேற்றக்‍ கழகம் சார்பில் போட்டியிடும் போட்டியிடும் லோகநாயகி மாணிக்கம், முடிச்சூர் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்‍கு போட்டியிடும் ரீனா கென்னடி ஆகியோர், பரங்கிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00