கே.சி.வீரமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரெய்டு நடத்திய விவகாரம் - பறிமுதல் செய்த ரொக்‍கம் மற்றும் முக்‍கிய ஆவணங்கள் நீதிமன்றத்தில் ஒப்படைப்பு

Sep 21 2021 7:58PM
எழுத்தின் அளவு: அ + அ -
முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணியின் இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பறிமுதல் செய்த ரொக்‍கப் பணம் மற்றும் முக்‍கிய ஆவணங்கள், வேலூர் நீதிமன்றத்தில் ஒப்படைக்‍கப்பட்டன.

முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி மற்றும் அவரது குடும்பத்தினர் பங்குதாரர்களாக உள்ள நிறுவனங்கள் பெயரில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக, வேலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவினர் வழக்குப் பதிவு செய்தனர். இதைத்தொடர்ந்து, கடந்த 16-ம் தேதி திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் உள்ள கே.சி. வீரமணி இல்லம் மற்றும் சென்னை, பெங்களூரு உட்பட 35 இடங்களில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். இதில் ரொக்‍கப் பணம், நகைகள், சொகுசு கார்கள் மற்றும் முக்‍கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சுமார் 5 கிலோ தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், ரொக்‍கப்பணம், 7 கிலோ வெள்ளி, ஒரு லட்சத்து 80 ஆயிரம் அந்நியச் செலாவணி டாலர், செல்போன், லேப்டாப், ஹார்ட்டிஸ்க் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை அறிக்‍கையில் தெரிவிக்‍கப்பட்டது.

இந்நிலையில், கே.சி.வீரமணியின் இல்லத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட முக்கிய ஆவணங்கள், ஹார்ட் டிஸ்க்குகள், பென் டிரைவ் மற்றும் 20 லட்சம் ரொக்கப் பணம் ஆகியவற்றை லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள், வேலூர் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர். கே.சி.வீரமணியில் இல்லத்தில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை இன்னமும் ஒப்படைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00