சென்னை அம்பத்தூரில், கடத்தப்பட்ட குழந்தையை சில மணி நேரத்தில் மீட்ட காவல்துறை - கடத்தலில் ஈடுபட்ட மத்திய பிரதேசத்தை சேர்ந்த 2 பேர் கைது

Sep 22 2021 3:08PM
எழுத்தின் அளவு: அ + அ -
சென்னை அம்பத்தூரில் கடத்தப்பட்ட குழந்தையை புகாரளித்த நான்கு மணி நேரத்தில் காவல்துறையினர் மீட்டுள்ளனர். கடத்தலில் ஈடுபட்ட மத்திய பிரேதசத்தை சேர்ந்த 2 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

அம்பத்தூர் தொழில்பேட்டையில் கூலி வேலை செய்யும், பிஹார் மாநிலத்தைச் சேர்ந்த மிதிலேஷ் குமார் - துர்காதேவி தம்பதியினரின் 3 வயது மகன் ஷியாமை, இவர்களது வீட்டின் மேல் தளத்தில் குடியிருந்த மத்திய பிரதேசத்தை சேர்ந்த சிவகுமார், மோனு ஆகியோர், கடந்த 18-ம் தேதி, சாக்லேட், பிஸ்கட் வாங்கி கொடுத்து வெளியே அழைத்துச் சென்றதாக கூறப்படுகிறது. பல இடங்களில் சிறுவனை தேடியும் கிடைக்காதால், 19 ஆம் தேதி அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளிக்‍கப்பட்டது. அதன்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், சிவகுமார் மோனு ஆகியோர் குழந்தையை கடத்தியது உறுதியானது. இதுபற்றி சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் உள்ள ரயில்வே மத்திய கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் சென்றடையும் ரயில் நிலையமும் கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக நாக்பூர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தால் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்த குழந்தை உள்ளிட்ட மூவரை கைது செய்தனர். தகவல் அறிந்த அம்பத்தூர் தொழிற்பேட்டை போலீசார், விமானம் மூலம் நாக்பூர் சென்று குற்றவாளிகள் இருவரையும் கடத்தப்பட்ட குழந்தையையும் சென்னைக்கு மீட்டு வந்தனர். பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இருவரையும் புழல் சிறையில் அடைத்துள்ளனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00