பொறியியல் படிப்புக்கான மாணவர் சேர்க்கை - பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, வரும் 27-ந்தேதி முதல் ஆன்லைனில் நடைபெறும்

Sep 22 2021 4:12PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கையில் பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு, 27-ந்தேதி முதல் ஆன்லைனில் நடைபெற உள்ளது.

பொறியியல் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்‍‍கான கலந்தாய்வில், தற்போது சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. அதனைத்தொடர்ந்து வருகிற 27-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை பொதுப்பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற உள்ளது. பொறியியல் படிப்பில் பொதுப்பிரிவில் கலந்து கொள்வதற்காக ஒரு லட்சத்து 36ஆயிரத்து 973 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனர். ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடைபெற்று வரும் சூழ்நிலையில், முதலில் கலந்தாய்வுக்கான கட்டணம் செலுத்தி, அதன் பின்னர், விருப்ப கல்லூரிகளை தேர்வு செய்வதற்கும், தற்காலிக இடஒதுக்கீட்டு ஆணை வெளியிடுவதற்கும், அதனை உறுதி செய்வதற்கும் அவகாசம் வழங்கப்படும். மாணவர்களின் தரவரிசை பட்டியல் அடிப்படையில் எந்தெந்த தேதியில் மாணவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும் என்பது குறித்த அட்டவணை தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 4 சுற்றுகளாக பொது பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00