திண்டுக்‍கல்லில் திமுக நிர்வாகியின் தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்ட 11 ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல் - திமுக பிரமுகர் உட்பட 5 பேர் கைது

Sep 22 2021 5:34PM
எழுத்தின் அளவு: அ + அ -
திண்டுக்‍கல்லில், தி.மு.க கிளைச் செயலாளர் தோட்டத்தில், மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 ஆயிரத்து 500 மது பாட்டில்களை போலீசார் கைப்பற்றினர். பின்னர் திமுக நிர்வாகி உட்பட 5 பேரை கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் அனுமந்தராயன் கோட்டை பகுதியில், திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சீனிவாசனுக்‍கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், தனிப்பிரிவு போலீசார் அனுமந்தராயன் கோட்டை பகுதிகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது பிரதர்மேடு என்னுமிடத்தில், அனுமந்தராயன் கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் நிர்மலாவின் கணவரும், திமுக கிளை செயலாளரான இன்பராஜ் என்பவரது தோட்டத்து வீட்டில், புதுச்சேரியில் இருந்து கடத்தி வரப்பட்ட பல லட்ச ரூபாய் மதிப்புள்ள சுமார் 11 ஆயிரத்து 500 மதுபாட்டில்கள் கைப்பற்றப்பட்டன. மேலும், சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்த திமுக கிளைச் செயலாளர் உள்ளிட்ட 5​ பேரை போலீசார் கைது செய்தனர். கிராம பகுதியில் காவல்துறையினர் சுற்றிவளைத்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. தி.மு.க. பிரமுகர் வீட்டில் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00