தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நில ஆவணங்கள் மாயமான விவகாரம் - 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய நில நிர்வாகத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

Sep 22 2021 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
தாம்பரம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நிலம் தொடர்பான ஆவணங்கள் மாயமானது குறித்து விசாரித்து 4 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய, நில நிர்வாக துறை ஆணையருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜமீன் பல்லாவரத்தில் தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான 1.79 ஏக்‍கர் நிலத்தை, குவெண்டி தாசன் என்ற பெயருக்‍கு பட்டா மாற்றம் செய்து, வருவாய் கோட்டாட்சியராக இருந்த ராஜ்குமார் உத்தரவிட்டார். இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவு ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், மேல்முறையீட்டு மனுவை விசாரித்த நீதிபதிகள் புஷ்பா சத்தியநாராயணா மற்றும் கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, தவறிழைத்த அதிகாரிகள் மீது எடுக்க உள்ள நடவடிக்கை குறித்து அறிக்கை அளிக்க உத்தரவிட்டு, விசாரணையை அக்டோபர் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00