மதுரையில் வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை

Sep 23 2021 1:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரையில், வரதட்சணை கொடுமையால் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

காளவாசல் பகுதியை சேர்ந்த மாளவிகா என்பவருக்கும், K.பாறைப்பட்டி பகுதியை சேர்ந்த பிரபாகரன் என்பவருக்கும் கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. மணமகனுக்கு வரதட்சணையாக 120 சவரன் நகை, 10 லட்ச ரூபாய் ரொக்கம் மற்றும் சீர்வரிசை பொருட்களை, மணமகள் வீட்டார் வழங்கி உள்ளனர். இந்நிலையில், திருமணம் முடிந்த 10 மாதங்களிலேயே உடல்நல குறைவால் பிரபாகரன் உயிரிழந்தார். பிரபாகரனின் சகோதரர் பிரகாஷும், அவரது பெற்றோரும், வரதட்சணை பணம் மற்றும் நகையை கைப்பற்ற திட்டமிட்டனர். அதன்படி, மாளவிகாவை, அவரது பெற்றோருக்கு தெரியாமல் அவசர அவசரமாக பிரகாஷூக்கு, அவரது பெற்றோர் திருமணம் செய்து வைத்துள்ளனர். பின்னர் வரதட்சணை கேட்டு தொந்தரவு கொடுத்ததால், மாளவிகாவின் பெற்றோர் மீண்டும் 75 சவரன் நகை, 5 லட்சம் ரூபாய் ரொக்கத்தை வழங்கியதாக கூறப்படுகிறது. அதன் பிறகும் கூடுதலாக வரதட்சணை கேட்டதால் மனமுடைந்த மாளவிகா, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரில், பிரகாஷ், அவரது தந்தை பாண்டி ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்த போலீசார், தலைமறைவாக உள்ள பிரகாஷின் தாயாரை தேடி வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00