வங்கக்கடலில் நாளை மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு - சென்னை வானிலை மையம் தகவல்

Sep 23 2021 1:51PM
எழுத்தின் அளவு: அ + அ -
வளிமண்டல மேலடுக்‍கு சுழற்சி காரணமாக, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்‍கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்தள்ளது.

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்‍கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் எனவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் ஒரு சில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரியாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் மதுரை மாவட்டம் மேலூரில் 7 சென்டிமீட்டரும், சிவகங்கை மாவட்டம் திருபுவனம், மதுரை மாவட்டம் புலிப்பட்டியில் தலா 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

வடகிழக்கு மற்றும் அதனையொட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில், நாளை மாலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ஆந்திர கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்‍கூடும் - மத்திய கிழக்கு வங்கக்‍ கடல் பகுதிகள் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில், இன்றும், நாளையும் பலத்த காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவித்துள்ள வானிலை மையம், வரும் 26, 27-ம் தேதிகளில், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்‍கடல் பகுதிகளில், பலத்த காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் - எனவே, மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00