9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 97 ஆயிரத்து 831 வேட்பு மனுக்‍கள் தாக்‍கல் - தமிழ்நாடு தேர்தல் ஆணையம் தகவல்

Sep 23 2021 2:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழகத்தில், 9 மாவட்டங்களில் நடைபெறும் ஊரக உள்ளாட்சித் தேர்தலில், 97 ஆயிரத்து 831 வேட்பு மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழகத்தில் புதிதாகப் பிரிக்‍கப்பட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, தென்காசி, கள்ளக்‍குறிச்சி, நெல்லை, விழுப்புரம், வேலூர் ஆகிய 9 மாவட்டங்களில், ஊரக உள்ளாட்சித் தேர்தல், இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் 6 மற்றும் 9-ம் தேதிகளில் நடைபெறவுள்ளது. 140 மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக்‍கும், 74 ஊராட்சி ஒன்றியங்களுக்‍கு உட்பட்ட ஆயிரத்து 381 ஒன்றியக்‍கவுன்சிலர் பதவியிடங்கள் உட்பட மொத்தம் 27 ஆயிரத்து 3 பதவியிடங்களுக்‍கு, ஊரக உள்ளாட்சிப் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்‍கப்பட உள்ளனர்.

ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 97 ஆயிரத்து 831 மனுக்‍கள் தாக்‍கல் செய்யப்பட்டுள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்‍கு 72 ஆயிரத்து 71 பேரும், கிராம ஊராட்சித் தலைவர் பதவிகளுக்‍கு 15 ஆயிரத்து 967 பேரும் வேட்பு மனுக்‍கள் தாக்‍கல் செய்துள்ளனர். ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளுக்‍கு 8 ஆயிரத்து 671 பேரும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்‍கு ஆயிரத்து 122 பேரும் வேட்பு மனுக்‍கள் தாக்‍கல் செய்துள்ளதாக, மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், வேட்பு மனுக்‍கள் மீது இன்று பரிசீலனை நடைபெற்று வருகிறது. வேட்பு மனுக்‍களை திரும்பப்பெற நாளை மறுநாள் கடைசிநாளாகும்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00