விதிமுறைகளை மீறி சொத்து சேர்த்ததாகப் புகார் - மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் வெங்கடாச்சலம் வீடு மற்றும் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை

Sep 23 2021 8:30PM
எழுத்தின் அளவு: அ + அ -
மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாச்சலம் வீடு மற்றும் அலுவலகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.

ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரியான வெங்கடாசலம், கடந்த 2019-ம் ஆண்டு, மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக நியமிக்கப்பட்டார். இன்றுடன் ஓய்வு பெற உள்ள நிலையில், சென்னை கிண்டியில் உள்ள அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். வெங்கடாசலம் விதிமுறை மீறி சொத்து சேர்த்ததாகவும், பணியைப் பயன்படுத்தி முறைகேடான முறையில் பல நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கு அனுமதி வழங்கி வருமானம் சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதன் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் 10-க்‍கும் மேற்பட்டோர், சோதனை நடத்தி வருகின்றனர். இதேபோல், வேளச்சேரி செகரட்டரியேட் காலனி, 2-வது தெருவில் உள்ள வெங்கடாச்சலத்தின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புப் போலீசார் சோதனை மேற்கொண்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00