புரட்சித்தாய் சின்னம்மாவை பற்றி அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமிக்‍கு வலுக்‍கும் எதிர்ப்பு -- நெல்லையில் அஇஅதிமுக-வினர் ஒன்றுதிரண்டு உருவபொம்மை எரிக்‍க முயற்சி

Oct 21 2021 1:42PM
எழுத்தின் அளவு: அ + அ -
புரட்சித்தாய் சின்னம்மா பற்றி அவதூறாக பேசிய எடப்பாடி பழனிச்சாமியைக்‍ கண்டித்து, நெல்லையில் அ.இ.அ.தி.மு.க.-வினர் போராட்டம் நடத்தினர். அப்போது எடப்பாடி பழனிசாமியின் உருவபொம்மையை எரிக்க முயன்றதல் பரபரப்பு ஏற்பட்டது.

புரட்சித்தாய் சின்னம்மா பற்றி அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமிக்‍கு அ.இ.அ.தி.மு.க-வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக நெல்லை மாநகர அ.இ.அ.தி.மு.க.வினர் மத்தியில் இது பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பாளையங்கோட்டை, வண்ணாரப்பேட்டையில், எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை அ.இ.அ.தி.மு.க-வினர் எரிக்க முயன்றனர். அப்போது அங்கு நின்ற காவலர்களுக்கும், அ.இ.அ.தி.மு.க-வினருக்‍கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமி உருவபொம்மையை காவல்துறையினர் பறித்து சென்றனர். பின்னர் எடப்பாடி பழனிசாமியை கண்டித்து அ.இ.அ.தி.மு.க-வினர் போராட்டம் நடத்தினர். அப்போது எடப்பாடிக்‍கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பினர்.

புரட்சித்தாய் சின்னம்மா பற்றி அவதூறாக பேசிய எடப்பாடி பழனிசாமியை கண்டித்து தொடர்ந்து போராட்டம் நடத்தப்படும் என அ.இ.அ.தி.மு.க-வினர் தெரிவித்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00