நீலகிரியில் ஊருக்‍குள் புகுந்த புலியை உயிருடன் பிடித்த வனத்துறைக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு -- புலியை தொடர்ந்து கண்காணிக்‍குமாறு அரசுக்‍கு உத்தரவிட்டு வழக்‍கை முடித்து வைத்தது நீதிமன்றம்

Oct 21 2021 1:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
நீலகிரியில் ஊருக்‍குள் உலவிய புலியை உயிருடன் பிடிக்‍க பாடுபட்ட வனத்துறை அதிகாரிகளுக்‍கு சென்னை உயர்நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் 4 மனிதர்கள் மற்றும் 50க்‍கும் மேற்பட்ட கால்நடைகளை அடித்துக்‍கொன்றுவிட்டு வனப்பகுதியில் போக்‍கு காட்டி வந்த புலியை, வனத்துறையினர் நீண்ட தேடுதல் வேட்டைக்‍குப்பின் மயக்‍க ஊசி செலுத்தி உயிருடன் பிடித்தனர். இப்பணியில் வனத்துறையினர், வேட்டைத் தடுப்புக்‍ காவலர்கள், கால்நடை மருத்துவக்‍குழுவினர், மோப்ப நாய்கள், கும்கி யானைகள் ஈடுபடுத்தப்பட்டன. இப்புலியை உயிருடன் பிடித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் நன்றியும், வனத்துறை அதிகாரிகளுக்‍கு பாராட்டும் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 29-ம் தேதி முதல், புலியைப் பிடிக்‍க எடுத்த நடவடிக்‍கைகள் குறித்து தலைமை வனப்பாதுகாவலர் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் தெரிவிக்‍கப்பட்டது. கடந்த 16-ம் தேதிக்‍குப்பின் மைசூரு விலங்கியப் பூங்காவில் உள்ள மீட்பு மையத்தில் புலிக்‍கு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருவதாகவும், தற்போது புலிக்‍கு வழங்கப்படும் சிகிச்சை பலனளிப்பதாகவும், முறையாக உணவு உட்கொள்வதாகவும் அறிக்கையில் தெரிவிக்‍கப்பட்டுள்ளது. இதையடுத்து, புலியைக்‍ கண்காணித்து உரிய நடவடிக்‍கை எடுக்‍க அரசுக்‍கு உத்தரவிட்ட உயர்நீதிமன்றம், வழக்கை முடித்து வைத்தது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00