தஞ்சையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வீடுகளை இடித்து பூங்கா அமைக்க திட்டம் - பொதுமக்‍கள், அ.ம.மு.க.வினர் சாலை மறியல் போராட்டம்

Oct 21 2021 8:14PM
எழுத்தின் அளவு: அ + அ -
தஞ்சையில், பல ஆண்டுகளாக வசித்து வரும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளை இடித்துத்தள்ளி மக்‍களை வெளியேற்றும் முடிவைக்‍ கைவிடக்‍கோரி, பொதுமக்‍கள் மற்றும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாநகராட்சிக்கு உட்பட்ட வடஅங்கம், மேல்அலங்கம், கோட்டை வளைவு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஆயிரம் வீடுகள் உள்ளன. இங்கு, மூன்று நான்கு தலைமுறைக்குமேல் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த வீடுகளை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, பூங்கா அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. வீடுகளை அகற்றுவது குறித்து நோட்டீஸ் வழங்கப்பட்டிருப்பதுடன், இதுகுறித்து அதிகாரிகள் ஆலோசனைக்‍கூட்டம் நடத்தினர். வீடுகள் இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை அண்ணா சிலை பகுதியில், பொதுமக்‍கள் மற்றும் அம்மா மக்‍கள் முன்னேற்றக்‍கழகத்தினர், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்கு தலைமுறைகளாக இருக்கும் தங்களின் வாழ்வாதாரத்தை பாதுகாக்காமல், பூங்கா அமைக்க திட்டமிட்டுள்ள மாநகராட்சிக்‍கும், தி.மு.க. அரசுக்‍கும் கண்டனம் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00