அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுடன் கழக நிர்வாகிகள் சந்திப்பு : இல்ல விழாக்களில் கலந்துகொள்ள வேண்டி அழைப்பிதழ்களை வழங்கினர்

Dec 5 2021 6:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
அ.ம.மு.க. பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, கழக நிர்வாகிகள் சந்தித்து, தங்களது இல்ல விழாக்‍களில் கலந்துகொள்ள வேண்டி அழைப்பிதழ்களை வழங்கினர்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமை அலுவலகத்தில், கழக பொதுச்செயலாளர் திரு.டிடிவி தினகரனை, தஞ்சை தெற்கு மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர் திரு.தண்டாயுதபாணி சந்தித்து, தனது மகன் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார். கழக துணைப் பொதுச்செயலாளர் திரு. M. ரங்கசாமி, தஞ்சை தெற்கு மாவட்டச் செயலாளர் திரு. மா.சேகர், மாநில இளைஞரணி தலைவர் திரு.M.R. காமராஜ், செயற்குழு உறுப்பினர் திரு.N.S. துரைராஜ் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

திரு.டிடிவி தினகரனை, திருவண்ணாமலை தெற்கு மாவட்டம், துரிஞ்சாபுரம் ஒன்றிய கழக செயலாளர் திரு. ஆனந்தன் சந்தித்து, தனது இல்ல புதுமனை புகுவிழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார். கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.என்.ஜி. பார்த்திபன், மாவட்டச்செயலாளர் செங்கம் திரு.பரந்தாமன், திருவண்ணாமலை மேற்கு ஒன்றியச் செயலாளர் திரு. பாலசுப்பிரமணியம் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

கழகப் பொதுச் செயலாளர் திரு.டிடிவி​தினகரனை, வேலூர் புறநகர் மாவட்டம், குடியாத்தம் ஒன்றியச் செயலாளர் திரு. பூபாலன் சந்தித்து, தனது மகன் திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு அழைப்பிதழ் வழங்கினார். கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு. என்.ஜி. பார்த்திபன், வேலூர் புறநகர் மாவட்டச் செயலாளர் திரு. சத்யா என்கிற சதீஷ்குமார், ஒன்றியச்செயலாளர் திரு. இளங்கோ, மாவட்ட பேரவை செயலாளர் திரு. செந்தில்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

திரு.டிடிவி தினகரனை, வேலூர் மாநகர் மாவட்ட பிரதிநிதி திரு. ராஜா சந்தித்து, தனது இல்லத்திருமண விழாவில் கலந்து கொள்ளுமாறு, திருமண அழைப்பிதழ் வழங்கினார். கழக தேர்தல் பிரிவுச் செயலாளர் திரு.என்.ஜி. பார்த்திபன், மாவட்டச் செயலாளர் திரு. ராஜா, பேரூர் கழக செயலாளர் திரு. காந்தி, பொதுக்குழு உறுப்பினர் திரு. வெங்கடேசன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் திரு.மகேந்திரன் உள்ளிட்ட கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00