மதுரை வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு - நீரை முறையாக இருப்பு வைக்க முடியாத நிலையில் கடலில் வீணாக கலக்கும் அவலம்

Dec 6 2021 11:25AM
எழுத்தின் அளவு: அ + அ -
மதுரை வைகை ஆற்றில் மீண்டும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தேனி மாவட்டம் வைகை அணை முழு கொள்ளளவை எட்டியதால், அணையில் இருந்து விநாடிக்கு 12 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது. வைகை அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீர் மற்றும் வைகை அணையை ஒட்டியள்ள நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் தொடர் மழையால், உபரிநீரும் சேர்ந்து வைகை ஆற்றின் நீரின் வரத்து அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன் காரணமாக மதுரை வைகையாற்றில் வெள்ளப்பெருக்கு அதிகரித்து, யானைக்கல் தரைப்பாலம் முழுமையாக நீரில் மூழ்கியது. தரைப்பாலத்தில் பொதுமக்கள், வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வைகையாற்றுப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், கால்நடைகளை பாதுகாப்பு பராமரிக்கவும், கால்நடைகளை ஆற்றில் இறக்கிவிடவோ, நீர்நிலைகளின் அருகிலோ கட்டிவைக்க வேண்டாம் எனவும், மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில், காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலமாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00