அரசு பள்ளி மாணவர்களுக்கு 'நீட்' மாதிரி தேர்வு, வினா வங்கி வழங்க திட்டம் : அரசு ஆசிரியர்கள் மூலம் வினா வங்கி நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு

Dec 6 2021 12:07PM
எழுத்தின் அளவு: அ + அ -
தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு NEET மாதிரி தேர்வு நடத்த பள்ளி கல்வித்துறை முடிவு செய்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்‍கிறது.

பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள் மருத்துவ கல்வியில் சேர, மத்திய அரசு நீட் நுழைவு தேர்வு நடத்தி வருகிறது. ஐ.ஐ.டி.போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, மாணவ, மாணவிகள் JEE நுழைவு தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம். நுழைவு தேர்வு நடத்த தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்த போதிலும், அரசு பள்ளி மாணவர்களுக்கு, நீட் தேர்வுக்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இந்த ஆண்டு மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் வழியே அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி அளிக்‍க திட்டமிட்டுள்ளது. அவர்களுக்கு மாதிரி தேர்வுகளை நடத்தவும், நீட் தேர்வுக்கான வினா வங்கி வழங்கவும், பள்ளி கல்வித்துறை முடிவெடுத்துள்ளது.

இதற்காக, அரசு பள்ளி ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு நீட் மாதிரி தேர்வு மற்றும் வினா வங்கி தயாரிக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ சேர்க்கையில் 7.5 சதவீதஇட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00