கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறி பொது நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் பங்கேற்றாரா? - விளக்‍கம் கேட்கப்படும் என தமிழக சுகாதாரத்துறை தகவல்

Dec 6 2021 1:26PM
எழுத்தின் அளவு: அ + அ -
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைபடுத்திக் கொள்ளாமல் பொது நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்க சுகாதாரத்துறை முடிவு செய்துள்ளது. சென்னை ஓமந்தூரார் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் ஒமைக்ரான் தொற்றுக்கு 50 படுக்கைகள் கொண்ட சிகிச்சை பிரிவு துவக்கம் செய்யப்பட்டுள்ளது. 15 படுக்கைகள் கொண்ட தீவிர சிகிச்சை பிரிவும், 35 படுக்கைகள் கொண்ட சிறப்பு சிகிச்சை பிரிவும் தயார் செய்யப்பட்டுள்ளது.இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவமனை முதல்வர் ஜெயந்தி ஆகியோர் துவக்கி வைத்து ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன், ஒமைக்ரான் வேகமாக பரவும் தன்மை இருந்தாலும், பெரிதாக அச்சப்பட தேவையில்லை என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சுகாதாரத் துறை செயலாளர் திரு. ராதாகிருஷ்ணன், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் ஈடுபடாமல் பொது நிகழ்ச்சியில் கமல் பங்கேற்றது குறித்து விளக்கம் கேட்கப்படும் என்று கூறினார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00