திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் தொடர் கனமழை : அரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

Dec 6 2021 2:52PM
எழுத்தின் அளவு: அ + அ -
திருச்சி மாவட்டம் மணப்பாறை பகுதியில் கனமழையால், அரியாறு கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது. மணப்பாறையில் பெய்த கனமழையால் சாலைகளில் வெள்ளப்பெருக்‍கு ஏற்பட்டது.

மணப்பாறையில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் ஏற்கனவே நீர்நிலைகள் நிரம்பியுள்ளன. இதனிடையே, இன்று காலை முதல் மீண்டும் கனமழை பெய்ததால் சாலைகளில் நீர் சூழ்ந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்‍கப்பட்டுள்ளது. அரியாற்றின் கரைப் பகுதியில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறும், மாவட்ட ஆட்சித்தலைவர் சிவராசு அறிவுறுத்தி உள்ளார். கனமழையால், மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு சுமார் 3 அடி உயரத்திற்கு நீர் தேங்கி உள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் சிரமத்துக்‍கு உள்ளாகினர்.

பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படாத நிலையில் மாணவ, மாணவிகள் சாலையில் தேங்கி உள்ள நீரில் தத்தளித்த படி கொட்டும் மழையில் நனைந்தபடி சென்றனர். தொடர் மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00