குடியரசுத்தின அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதற்கு டிடிவி தினகரன் கண்டனம்

Jan 18 2022 12:32PM
எழுத்தின் அளவு: அ + அ -
குடியரசுத்தின அணிவகுப்பில் தமிழகத்தின் ஊர்திகள் புறக்கணிக்கப்பட்டதற்கு, திரு.டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் திரு.டிடிவி தினகரன் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின அணிவகுப்பில் தமிழகத்தைச் சேர்ந்த சுதந்திரப் போராட்ட வீரர்களின் படங்கள் அடங்கிய அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

மத்திய அரசு அதிகாரிகளின் இந்த நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்துள்ள திரு.டிடிவி. தினகரன், ஆங்கிலேயருக்கு எதிராக வீரப்போர் புரிந்த முதல் பெண் அரசி ராணி வேலு நாச்சியாருக்கும், தன் சொத்துக்களை விற்று சுதேசி கப்பல் ஓட்டி சிறையில் செக்கிழுத்த வ.உ.சிதம்பரனாருக்கும், அனல்பறக்கும் கவிதைகளால் விடுதலை உணர்வைக் கிளர்ந்தெழ செய்த மகாகவி பாரதியாருக்கும் இந்த தேசம் காட்டும் நன்றிக் கடன் இதுதானா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

குடியரசு நாள் அணிவகுப்பில் தமிழக ஊர்தியும் இடம்பெறுவதற்கான அனுமதியை மத்திய அரசு வழங்குவது தான், இந்திய விடுதலைக்காக முதல் முழக்கமிட்ட தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிப்பதாக அமையும் எனவும் திரு.டிடிவி. தினகரன் வலியுறுத்தியுள்ளார்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00