குடியரசு தின விழா அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாது - மாநில அரசின் கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு

Jan 18 2022 5:02PM
எழுத்தின் அளவு: அ + அ -
நாட்டின் குடியரசு தின அணிவகுப்பில் தமிழக அரசின் அலங்கார ஊர்தி இடம்பெறாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

நாட்டின் 73வது குடியரசு தினம் வரும் 26ம் தேதி நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. டெல்லி ராஜபாதையில் குடியரசு தினத்தின்போது பல்வேறு மாநிலங்களின் பெருமைகளை பறைசாற்றும் அலங்கார ஊர்திகள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் இம்முறை தமிழகம் உள்ளிட்ட சில மாநிலங்களின் ஊர்திகள் இடம்பெறுவதற்கு மத்திய அரசு அனுமதி மறுத்துள்ளது. பெருமைக்குரிய அம்சங்கள் இடம்பெறவில்லை என்றும், கொரோனா பரவலை கருத்தில் கொண்டும் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை மத்திய அரசு மறுபரிசீலனை செய்து தமிழக அரசின் ஊர்திகள் இடம்பெற மத்திய அரசு ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இதேபோல் மேற்குவங்கம் போன்ற சில மாநிலங்களும் கோரிக்கை விடுத்தன. ஆனால் மத்திய அரசு இதனை திட்டவட்டமாக ஏற்க மறுத்துள்ளது. இதன் காரணமாக தமிழகம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களின் அலங்கார ஊர்திகள் குடியரசு தின அணிவகுப்பில் இம்முறை இடம்பெறாத நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00