முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் உறவினர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை - 2 கோடியே 65 லட்சம் ரூபாய் மற்றும் முக்‍கிய ஆவணங்கள் பறிமுதல்

Jan 20 2022 6:40PM
எழுத்தின் அளவு: அ + அ -
வருமானத்துக்‍கு அதிகமாக சொத்து குவித்த புகாரில், முன்னாள் அமைச்சர் K.P. அன்பழகன் மற்றும் அவருக்‍குத் தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். இந்தச் சோதனையில், ஆறரை கிலோ தங்கம், 14 கிலோ வெள்ளி, 2 கோடியே 87 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் பல‍ கோடி ரூபாய்க்கான சொத்து ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முந்தைய எடப்பாடி பழனிசாமி ஆட்சியில், உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்த K.P.அன்பழகன் மீது வருமானத்திற்கு அதிகமாக 11 கோடி ரூபாய் அளவுக்‍கு சொத்து குவித்ததாக புகார் எழுந்தது. இது தொடர்பாக K.P.அன்பழகன், அவரது மனைவி மல்லிகா, மகன்கள் சசிமோகன், சந்திரமோகன் மற்றும் மருமகள் வைஷ்ணவி ஆகிய 5 பேர் மீது வழக்‍குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக எழுந்த புகாரின் பேரில், K.P.அன்பழகனுக்கு தொடர்புடைய 57 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் இன்று சோதனையில் ஈடுபட்டனர். சென்னையில் கோபாலபுரம், நுங்கம்பாக்‍கம், அடையாறு உள்ளிட்ட இடங்களில் சோதனை நடைபெற்றது. K.P.அன்பழகனின் உறவினர்கள் மற்றும் ஆதரவாளர்களின் இல்லங்களிலும் சோதனை நடைபெற்றது.

தருமபுரி மாவட்டத்தில் K.P.அன்பழகனுக்‍கு சொந்தமான பெட்ரோல் பங்க், கிரானைட் குவாரி உள்ளிட்ட இடங்களிலும், கெரகோடஹள்ளியில் அமைந்துள்ள K.P.அன்பழகனின் இல்லத்திலும் அதிரடி சோதனை நடைபெற்றது. தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு எதிரே உள்ள K.P.அன்பழகனின் உதவியாளர் பொன்னுவேலுக்‍கு சொந்தமான வீட்டிலும், அன்பழகனின் தீவிர ஆதரவாளரான பாப்பிரெட்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் கோவிந்தசாமியின் இலக்‍கியம்பட்டி வீட்டிலும் இன்று காலை முதல் லஞ்ச ஒழிப்புக் காவல்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.

இதேபோல், சேலம் இரும்பாலை அருகே, ராசி நகர் பகுதியில் K.P.அன்பழகனின் நண்பரும், கனிமவளத்துறை உதவி இயக்‍குநருமான ஜெயபால் என்பவரின் வீட்டிலும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை நடத்தினார்கள். தர்மபுரி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயபால் பணியாற்றியபோது, முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு பல்வேறு வகையில் உதவிகள் செய்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே ஜெயபால் வீட்டில் சோதனை நடைபெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

லஞ்ச ஒழிப்புத் துறையினரின் சோதனை நடவடிக்கைகளைக் கண்டித்து, தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தின் கெரகோடஹள்ளி கிராமத்தில் உள்ள K.P.அன்பழகனின் இல்லம் முன்பு குவிந்த அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும், முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலினுக்‍கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

K.P.அன்பழகன் மற்றும் அவருடன் தொடர்புடைய பலரது வீடுகள், அலுவலகங்களில் நடைபெற்ற சோதனைகளில், 3 கிலோ தங்கம், 10 கிலோ வெள்ளிப் பொருட்கள், 1 கோடியே 60 லட்சம் ரூபாய் ரொக்‍கம் மற்றும் ஏராளமான சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00