திருவண்ணாமலை அருகே வன்கொடுமை தாக்குதல் விவகாரம் - எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய உத்தரவு
Jan 20 2022 4:18PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில், எஸ்.சி. எஸ்.டி. பிரிவினர் மீது நடத்தப்பட்ட வன்கொடுமை தாக்குதல் சம்பவம் தொடர்பாக, 15 நாட்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய, அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
திருவண்ணாமலை மாவட்டம் வீரளூரில், மயானத்திற்கு குறிப்பிட்ட பாதையில் உயிரிழந்தவரை எடுத்துச் செல்லக்கூடாது என்ற விவகாரத்தில், போலீசார் முன்பே எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், எஸ்.சி., எஸ்.டி பிரிவினர் மீது பிற சாதியினர் கண்மூடித்தனமாகத் தாக்கியதை காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் வேடிக்கைப் பார்த்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டுமென தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில், வன்கொடுமைத் தாக்குதல் தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை 15 நாட்களுக்குள் தாக்கல் செய்ய, அம்மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளருக்கு, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் யார்? - யார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது? - பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டதா? உள்ளிட்ட விவரங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.