நெல்லை மாவட்டத்தில் 792 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு
Jan 20 2022 4:57PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நெல்லை மாவட்டத்தில் 792 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நெல்லை மாநகராட்சி பகுதிகளில் 319 பேரும், அம்பாசமுத்திரம் பகுதிகளில் 81 பேர், சேரன்மகாதேவி பகுதிகளில் 26 பேர், களக்காடு ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் 28 பேர், வள்ளியூர் ஊராட்சி ஒன்றிய பகுதியில் 108 பேர் உட்பட, மொத்தம் 792 பேர் இன்று ஒரே நாளில் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று 692 பேர் பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இன்று ஒரே நாளில் கூடுதலாக 100 பேர் பாதிக்கப்பட்டு மொத்தம் 792 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.