ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2-ம் கட்டப் பணிகள் - முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்
Jan 20 2022 4:59PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2-ம் கட்டப் பணிகளை 4 ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக முதலைமச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில், காணொலிக் காட்சி வாயிலாக தருமபுரி மாவட்டத்தில் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது. அப்போது, சேலம் கோட்டையூர், தருமபுரி ஒட்டனூர் இடையே மேம்பாலம் அமைக்கப்படும் என்றும் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் 2-ம் கட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும் தெரிவித்தார்.