மதுரையில் சமூக ஆர்வலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு
Jan 20 2022 6:50PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் சமூக ஆர்வலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அனுப்பானடியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான அண்ணா முருகானந்தம் என்பவர், பொதுப்பிரச்னைகள் குறித்து அரசு நிர்வாகத்திற்கு கொண்டு சென்று, சமூகப் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டின் முன்பாக மர்ம நபர்கள் சிலர் பெட்ரோல் குண்டை வீசிவிட்டு தப்பியுள்ளனர். இதனால், அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனம் தீப்பற்றி எரிந்தது. சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.