பேரறிவாளனின் விடுதலை தமிழின மக்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அ.இ.அ.தி.மு.க. பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா நெகிழ்ச்சி - மாண்புமிகு அம்மா விதைத்த விதைக்கு கிடைத்த பலன் என்றும் கருத்து

May 18 2022 1:56PM
எழுத்தின் அளவு: அ + அ -

பேரறிவாளன் விடுதலை தமிழின மக்‍களுக்‍கு மகிழ்ச்சியை அளித்திருப்பதாக அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா குறிப்பிட்டுள்ளார். மாண்புமிகு அம்மா விதைத்த விதைக்‍கு கிடைத்த பலனாக இதனை பார்ப்பதாகவும் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், பேரறிவாளனுக்‍கு இன்று உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு வரவேற்கத்தக்‍கது எனக் குறிப்பிட்டுள்ளார். நம் புரட்சித்தலைவி அம்மா, கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 19-ம் தேதி அன்று, 7 நபர்களும் விடுதலை செய்யப்படுவார்கள் என்று தமிழக சட்டமன்றத்தில் சூளுரைத்தார் என அவர் சுட்டிக்‍காட்டியுள்ளார்.

அன்று நம் அம்மா விதைத்த விதைக்‍கு கிடைத்த பலனாகத்தான் இதை தாம் பார்ப்பதாக குறிப்பிட்டுள்ள சின்னம்மா, பேரறிவாளனின் விடுதலை, தமிழின மக்‍களுக்‍கு மகிழ்ச்சியை அளிக்‍கிறது என பெருமிதம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00