சென்னை மணலியில் தி.மு.க. நிர்வாகி கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் : உடல் பாகங்கள் கடலில் கொட்டப்பட்ட சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு

May 18 2022 7:18PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மணலியில் வெட்டிக்‍ கொல்லப்பட்ட தி.மு.க. நிர்வாகியின் உடல் பாகங்களை காசிமேடு துறைமுகத்தில், கடலில் கொட்டிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.

சென்னை மணலியில், திமுக 7-வது வட்டப் பிரதிநிதியாக இருந்த சக்கரபாணி, வட்டிக்கு பணம் கொடுத்தவர்களிடம் பணம் வாங்குவதற்காக, கடந்த 10-ம் தேதி வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்று​வீடு திரும்பாததால், அதுகுறித்து காவல்நிலையத்தில் குடும்பத்தினர் புகார் அளித்தனர். இதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தியபோது, தமீம் பானு என்பவரது வீட்டில் சக்கரபாணியின் உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டுக்‍ கிடந்தது.

சம்பவத்தன்று ராயபுரத்தில் உள்ள தமீம் பானுவின் வீட்டிற்கு சக்கரபாணி வந்ததும், அதனைக்‍ கண்ட தமீம் பானுவின் சகோதரர் சக்கரபாணியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், கத்தியால் குத்திக்‍ கொன்றதும் தெரியவந்தது. வெட்டிய தலையை போர்வையில் வைத்து அடையாறு ஆற்றில் தூக்‍கி வீசியதும், பிற பாகங்களை காசிமேடு மீன்பிடி துறைமுக பகுதியில் உள்ள கடற்கரையில் போட்டதும் விசாரணையில் தெரியவந்தது.

இந்நிலையில், காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், வெட்டிய உடல் பாகங்களை ஆட்டோவில் கொண்டு வந்து கடலில் கொட்டும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00