சென்னை தியாகராயநகர், பாண்டிபஜார் பகுதியில் வாகன நிறுத்த கட்டணம் அதிகரிப்பு - மாநகராட்சி அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அதிருப்தி

Jun 29 2022 2:37PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை தியாகராய நகர், பாண்டிபஜார் பகுதியில் வாகன நிறுத்தக்‍ கட்டணம் அதிகரிக்கப்படும் என்ற சென்னை மாநகராட்சியின் அறிவிப்பால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.

சென்னை தியாகராய நகர் பாண்டி பஜார் நடைபாதை வளாகம் அருகே, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பல அடுக்கு வாகன நிறுத்தம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. சாலையோரங்களில் வாகனங்களை நிறுத்திச் செல்வதற்கு ஏதுவாக 'ஸ்மார்ட் பார்க்கிங்' திட்டத்தையும் மாநகராட்சி செயல்படுத்தி வருகிறது.

அதன்படி, இருசக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 5 ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 20 ரூபாயும் வசூலிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில். பாண்டி பஜார் நடைபாதை வளாகத்தை 'பிரீமியம் பார்க்கிங்'-ஆக சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இனி ஒரு மணி நேரத்திற்கு இருசக்கர வாகனங்களுக்கு 15 ரூபாயும், நான்கு சக்கர வாகனங்களுக்கு 60 ரூபாயும் வசூலிக்கப்படும் எனவும், இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்‍கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00