அ.இ.அ.தி.மு.க.வை சின்னம்மா தொடர்ந்து தலைமையேற்று வழிநடத்த வேண்டும் : பெரம்பலூர் மகாமாரியம்மன் கோயிலில் கழகத் தொண்டர்கள் வழிபாடு
Jun 29 2022 2:40PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
அ.இ.அ.தி.மு.க.வை சின்னம்மா தொடர்ந்து தலைமையேற்று வழிநடத்த வேண்டி, பெரம்பலூர் மாவட்டம் வெள்ளுவாடி கிராமத்தில் அமைந்துள்ள மகாமாரியம்மன் கோயிலில் கழகத் தொண்டர்கள் சிறப்புப்பூஜைகள் செய்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை, வெள்ளுவாடி கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு மஹாமாரியம்மன் திருக்கோயிலில் 23 ஆண்டுகளுக்குப் பின்னர் திருத்தேரோட்டம் நடைபெற்றது. மஹாமாரியம்மனுக்கு சிறப்புப் பூஜைகள் செய்யப்பட்டு, சிறப்பு அலங்காரத்துடன் திருத்தேரில் எழுந்தருளினர். பக்தர்கள் அலகு குத்தி தங்களது வேண்டுதலை நிறைவேற்றி, திருத்தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
புரட்சித்தாய் சின்னம்மா, அ.இ.அ.தி.மு.க.வை தொடர்ந்து தலைமையேற்று வழிநடத்த வேண்டி கழகத் தொண்டர்கள் சிறப்புப் பூஜைகள் செய்தனர். ஆயிரக்கணக்கான பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.