ஈரோட்டில் சட்டவிரோத கருமுட்டை விற்பனை வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலை முயற்சி - அரசு மருத்துவமனையில் அனுமதிக்‍கப்பட்டு சிகிச்சை

Jun 29 2022 2:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஈரோடு கருமுட்டை விற்பனை வழக்கில், பாதிக்கப்பட்ட சிறுமி தற்கொலைக்‍கு முயன்றதால் பரபரப்பு நிலவுகிறது. ஈரோடு அரசு மருத்துவமனையில் சிறுமி அனுமதிக்‍கப்பட்டு சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில், 16 வயது சிறுமியின் கருமுட்டை விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனை, பெருந்துறை தனியார் மருத்துவமனை ஓசூர், கேரளா, ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மருத்துவமனை நிர்வாகிகளிடம் விசாரணை நடைபெற்றது. மருத்துவ குழுவினர் மற்றும் போலீசார் மருதரதுவமனைக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினர். மருத்துவர்கள் கீத்ராஜ், பிரதீபா ஆகியோரிடம் ஈரோடு தெற்கு காவல் நிலையத்தில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கனகேஸ்வரி விசாரணை நடத்தினார்.

இந்நிலையில், பாதிக்‍கப்பட்ட சிறுமி கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில், தற்கொலைக்‍கு முயன்றுள்ளார். கழிவறையை சுத்தம் செய்யும் பினாயிலை குடித்து தற்கொலைக்‍கு முயன்றதாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி மீட்கப்பட்டு, ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்‍கப்பட்டு வருகிறது. கருமுட்டை விற்பனை விவகாரத்தில் தாயார், அவரது இரண்டாவது கணவர், தரகர் உட்பட நால்வர் கைதாகி சிறையில் அடைக்‍கப்பட்டுள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00