நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
Jun 29 2022 2:53PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
நீலகிரி, கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேற்குதிசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில், இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு, நகரின் ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியசாக இருக்கக்கூடும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. ஆந்திர கடலோரப் பகுதிகள் மற்றும் அதனையொட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 60 கிலோமீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம், மீனவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.