விழுப்புரம்: இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 7 வயது சிறுமி உயிரிழப்பு - பொதுமக்‍கள் சாலை மறியல்

Jun 29 2022 3:12PM
எழுத்தின் அளவு: அ + அ -

விழுப்புரம் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் 7 வயது சிறுமி உயிரிழந்ததைக்‍ கண்டித்து பொதுமக்‍கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

விழுப்புரம் அருகேயுள்ள காரப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஈஸ்வரி என்பவர், தனது உறவினர் மகளான 7 வயது சிறுமி நிலாவை அழைத்துக்‍ கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்றார். இருவேல்பட்டு என்ற இடத்தில் சாலையை கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நிலா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தாள். படுகாயம் அடைந்த ஈஸ்வரியை பொதுமக்கள் மீட்டு, சிகிச்சைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்தில் சிறுமி பலியானதால் ஆத்திரமடைந்த இருவேல்பட்டைச் சேர்ந்த மக்கள் 200க்கும் மேற்பட்டோர் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பல கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, போராட்டத்தைக் கைவிட்டனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00