மதுரையில் நீர் பங்கீடு முறையை பறைச்சாற்றும் கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்பு : கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது என தொல்லியல் ஆய்வாளர்கள் தகவல்

Jun 29 2022 3:20PM
எழுத்தின் அளவு: அ + அ -

மதுரையில் கி.பி 16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நீர் பங்கீடு முறையை பறைச்சாற்றும் கலிங்கு கல்வெட்டு தொல்லியல் ஆய்வாளர்களால் கண்டறியப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம் கள்ளிக்குடி, வில்லூர் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர் திரு.பாலமுருகன் அளித்த தகவலின்பேரில், மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் திரு.முனீஸ்வரன் தலைமையில் வரலாற்று ஆர்வலர்கள் ஆய்வு செய்தனர். கண்மாய் நீர் நிரம்பி வெளியேறும் கலிங்கு பகுதியில் லிங்க வடிவம் ஒன்று தனி தூணில் கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்தது. இது கி.பி 16-ம் நூற்றாண்டை சேர்ந்த நீர் பங்கீட்டு முறை கல்வெட்டு என்பது தெரியவந்தது. கண்மாய், ஏரி, ஆறு போன்ற நீர் நிலைகளில் நீர் முறைப்படுத்தி வெளியேற்றுவதற்கு கற்களைக் கொண்டு அமைக்கப்படும் கட்டுமானமே கலிங்கு எனப்படுகிறது.

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு நீர் பங்கீடு முறையை ஊராட்சி அமைப்புகள் மூலம் உருவாக்கி மேலாண்மை செய்ய தனியாக கலிங்கு வாரியம் என்ற குழுவை ஏற்படுத்தி, நிர்வாகம் செய்ததாக தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00