ஓசூர் அருகே, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த அரசுப்பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை

Jun 29 2022 5:14PM
எழுத்தின் அளவு: அ + அ -

ஓசூர் அருகே, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த அரசுப்பள்ளி மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஓசூர் அருகேயுள்ள கௌதாளம் கிராமத்தை சேர்ந்த பாபு என்பவரின் மகள் சந்தனா ஸ்ரீ, தேன்கனிக்கோட்டை அரசு மேல்நிலை பள்ளியில் பிளஸ்-1 காமர்ஸ் குரூப் எடுத்து படித்து வந்தார். தமிழகம் முழுவதும் 11 ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் மாணவி சந்தனா ஸ்ரீ தோல்வி அடைந்தார். இதனால் விரக்தியில் இருந்த அவர், வீட்டின் அறையில் நேற்று கதவை தாளிட்டுக் கொண்டு மின்விசிறி மாட்டும் கம்பியில் கயிற்றால் தூக்கு மாட்டி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனைப்பார்த்த அவரது பெற்றோர் உடனடியாக மாணவியை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம், அவரது பெற்றோர்கள், உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து கெலமங்கலம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00