தமிழர்களுக்கு எதிரான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது - திருமுருகன் காந்தி குற்றச்சாட்டு
Jun 29 2022 6:02PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தமிழர்களுக்கு எதிரான ஆட்சி தமிழகத்தில் நடைபெறுவதாக மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
திருச்சியில் சிறப்பு முகாம்களில் அடைக்கப்பட்டுள்ள ஈழத் தமிழர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியும், ஈழத் தமிழர்கள் துன்புறுத்தப்படுவதாக குற்றம்சாட்டியும், திருச்சி மத்திய சிறையை முற்றுகையிட முயன்ற மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு.திருமுருகன் காந்தி உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர். அப்போது பேசிய திரு.திருமுருகன் காந்தி, சிறப்பு முகாம் என்ற பெயரில் ஈழத்தமிழர்களை தொடர்ந்து அடைத்து வருவது மனித குலத்திற்கு எதிரானது என்று குற்றம் சாட்டினார்.