தஞ்சையில், திமுக உட்கட்சி தேர்தலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட பயங்கர மோதல் : தள்ளுமுள்ளு - பதற்றம்

Jun 30 2022 1:27PM
எழுத்தின் அளவு: அ + அ -

தஞ்சையில், திமுக உட்கட்சி தேர்தலில் இருதரப்பினரிடையே ஏற்பட்ட மோதலால், கட்சி அலுவலகம் போர்க்களமாக மாறியது.

தஞ்சையில் உள்ள திமுக மாவட்ட அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில், திமுக உட்கட்சி தேர்தல் நடந்தது. இதில் தஞ்சை நாடாளுமன்ற உறுப்பினர் பழனி மாணிக்கம் ஆதரவாளர்களும், தஞ்சை திமுக தெற்கு மாவட்ட செயலாளர் துரை. சந்திரசேகரன் ஆதரவாளர்களும் போட்டியிட்டனர். இருமுனை போட்டியில் தேர்தல் பார்வையாளர்கள் ஒருதலைபட்சமாக துரை.சந்திரசேகரன் ஆதரவாளாகளுக்கு பதவி வழங்கியதால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. தஞ்சை வடக்கு ஒன்றிய செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட முரசொலி ஆதரவாளர்கள், எதிர்த்து போட்டியிட்ட பழனிமாணிக்கம் ஆதரவாளரான ஜெயராஜ் என்பவரை சரமாரியாக தாக்கினர். மேலும், கட்சி அலுவலகத்திலிருந்து வெளியேறிய பழனிமாணிக்கத்தின் காரை மறித்து அவரை தரக்குறைவாக திட்டினர். இந்த தகவல் அறிந்து வந்த பழனிமாணிக்கம் ஆதரவாளர்கள், கட்சி அலுவலகத்தில் மறியலில் ஈடுப்பட்டனர். இரு தரப்பினரிடையே ஏற்பட்ட இந்த மோதலால், கட்சி அலுவலகம் போர்க்களமாக மாறியது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00