அதிமுகவில் உச்சகட்ட கோஷ்டி மோதல் : எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்களை கைது செய்யக்கோரி ராமநாதபுரத்தில் சுவரொட்டி

Jul 2 2022 2:48PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரத்தில், எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய அதிமுக தொண்டர்கள், அவரின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

சென்னையில் நடைபெற்ற பொதுக்குழுவில், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் அத்துமீறலில் ஈடுபட்டதோடு, கட்சியின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் விதத்தில் நடந்து கொண்டனர். இதனால் கொதிப்படைந்துள்ள அதிமுக தொண்டர்கள், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அவரது ஆதரவாளர்களின் கட்சி விரோத போக்கை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். அந்த வகையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் இளஞ்செம்பூர், முதுகுளத்தூர், ஆண்டித்தேவன் வலசை, ராமநாதபுரம் உட்பட பல்வேறு இடங்களிலும் எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக அதிமுகவினர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

அதன் ஒருபகுதியாக, ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோயிலில், எடப்பாடி பழனிச்சாமியை கண்டித்து போராட்டம் நடத்திய கழகத்தினர், கண்டன முழக்கமிட்டு எடப்பாடி பழனிசாமியின் புகைப்படத்தை தீயிட்டு கொளுத்தினர். சிவி சண்முகம், கே.பி. முனுசாமி, ராஜன் செல்லப்பா ஆகியோரின் புகைப்படத்தை தீயிட்டு எரித்து, தங்களின் எதிர்ப்பை பதிவு செய்தனர்.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00