அதிக எடையுடன் உள்ள நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதி : கால்நடை மருத்துவர்கள் பரிசோதனை - நடைபயிற்சி மேற்கொள்ள அறிவுறுத்தல்

Jul 2 2022 4:07PM
எழுத்தின் அளவு: அ + அ -

நெல்லையில் பிரசித்திபெற்ற நெல்லையப்பர் திருக்‍கோயில் யானை அதிக எடையுடன் இருப்பதால், மருத்துவர்களின் அறிவுரைப்படி நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, நான்கு காலணிகள் வழங்கப்பட்டுள்ளன.

மாண்புமிகு அம்மா ஆட்சியில், யானைகளுக்‍கு ஆண்டுதோறும் புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வந்ததால், யானைகள் உடல் எடை சீராகவும், ஆரோக்‍கியமாகவும் பராமரிக்‍கப்பட்டு வந்தன. இதைத்தொடர்ந்து ஆண்டுதோறும் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் நடத்தப்பட்டு வந்தது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் கடந்த ஆண்டு யானைகளுக்‍கான முகாம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், நெல்லையப்பர் கோயில் யானை காந்திமதியை பரிசோதித்த கால்நடை மருத்துவர்கள், உடல் எடை அதிகமாக இருப்பதால், நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டுமென தெரிவித்தனர். இதையடுத்து, நாள்தோறும் சுமார் 6 கிலோமீட்டர் தூரம் யானைக்‍கு நடைபயிற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர் பகுதியில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகளுக்காக சாலைகள் தோண்டப்பட்டு வருவதால் குண்டும் குழியுமாக காட்சியளிக்‍கிறது. இதன் காரணமாக, யானை நடைபயிற்சி மேற்கொள்ள முடியாமல் தவித்து வந்தது. இதைத்தொடர்ந்து, நெல்லை டவுனில் உள்ள இந்து வியாபாரிகள் சங்கம் சார்பில், யானைக்கு நான்கு கால்களுக்கும் காலணிகள் வழங்கப்பட்டன.
செய்தி வீடியோ
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00