செங்கம் அருகே பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவரை காணவில்லை என புகார் : மிரட்டல் விடுத்த நபரை கைது செய்து கணவரை மீட்டுத்தர மனைவி கோரிக்கை
Jul 2 2022 4:26PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, பழங்குடியின ஊராட்சி மன்றத் தலைவர் காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
செங்கம் அடுத்த தண்டராம்பட்டு ஒன்றியம், கீழ்வணக்கம்பாடி ஊராட்சித் மன்ற தலைவராக செயல்படும் பழங்குடியின வகுப்பைச் சேர்ந்த தனது கணவர் குமார் கடந்த 10 நாட்களாக காணவில்லை என, தண்டராம்பட்டு காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார். தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவர், தனது கணவரை அவதூறான வார்த்தைகளால் திட்டியதாகவும், ஊருக்குள் வந்தால் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்றும் மிரட்டியதாகவும் புகார் தெரிவித்துள்ளார். மேலும், ஓசூரில் தான் கூலி வேலை செய்து வருவதால், கணவர் ஒரு வாரமாக வீட்டிற்கு வரவில்லை என உறவினர்கள் தனக்கு தகவல் கொடுத்ததாக குமாரின் மனைவி தெரிவித்துள்ளார். பூபதி மீது வழக்குப்பதிவு செய்து தனது கணவரை மீட்டுத் தர வேண்டுமென காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.