மதுரையில் இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் திருடிய மர்ம நபர் : போலிச் சாவி மூலம் பைக் திருட்டு - சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
Jul 2 2022 4:34PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
மதுரையில் வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை நள்ளிரவில் மர்ம நபர், போலிச் சாவி மூலம் திருடிச் சென்ற சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகியுள்ளன.
மதுரையில் நாளுக்கு நாள் இருசக்கர வாகனத்திருட்டு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புகார் எழுந்துள்ளன. மதுரை ஜெய்ஹிந்த்புரம் பகுதியில் திரு.மணிகண்டன் என்பவர், தனது இருசக்கர வாகனத்தை வீட்டின் காம்பவுண்ட் உள்ளே நிறுத்தி வைத்துள்ளார். அங்கு நள்ளிரவில் வந்த மர்ம நபர், போலிச் சாவி போட்டு திருடிச் சென்றார். இருசக்கர வாகனம் பாதியில் நின்றதால் பரிதவித்த கொள்ளையன், சினிமா பட பாணியில் பைக்குடன் போராடி மீண்டும் ஓட்டிச் சென்றார். இந்தக் காட்சிகள், அப்பகுதியில் இருந்த சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளன.