சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் பெரும் சுகாதார சீர்கேடு - மஞ்சள் நிறத்தில் காட்சியளிக்‍கும் குடிநீரைக்‍ கண்டு அஞ்சும் மக்‍கள்

Jul 2 2022 4:38PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் பெரும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடிப்பதற்காக வழங்கப்படும் தண்ணீர் மஞ்சள் நிறத்தில் உள்ளதால், மக்‍கள் அச்சமடைந்து உணவு உண்ணாமலே செல்லும் நிலை உள்ளது.

தமிழகத்தில் ஏழை எளிய மக்‍களுக்‍கு குறைந்த விலையில் தரமான உணவு கிடைக்‍கும் நோக்‍கில் அம்மா உணவகங்களை மாண்புமிகு அம்மா தோற்றுவித்தார். இதன்மூலம் பல்லாயிரக்‍கணக்‍கானோர் நாள்தோறும் பசியாறி வந்தனர். ஆனால், திமுக ஆட்சிக்‍கு வந்த நாளில் இருந்தே அம்மா உணவகங்களை சீரழிக்‍கும் நடவடிக்‍கையில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், நாளொன்றுக்‍கு ஆயிரக்‍கணக்‍கானோர் வந்து செல்லும் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் உள்ள அம்மா உணவகத்தில் நிலவும் சுகாதார சீர்கேட்டை கண்டு மக்‍கள் அச்சமடைகின்றனர்.

மாண்புமிகு அம்மாவால் திறந்து வைக்‍கப்பட்ட இந்த உணவகத்தில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் வரை உணவருந்தாலும், ஆனால், இதன் நிலையோ இப்போது பரிதாபமாக உள்ளது. பல நேரங்களில் உணவு தட்டுப்பாடு இருப்பதால், வேலை செய்யும் ஆட்களுக்‍கும், மக்‍களுக்‍கும் இடையே வாக்‍குவாதம் ஏற்படுகிறது. சமையல் செய்யும் பெரும்பாலான பாத்திரங்கள் பழுதாகியுள்ளன. சமையல் அறை அருகே பெருச்சாலிகள் சர்வ சாதாரணமாக உலவுகின்றன. ஈக்‍கள் மொய்த்து துர்நாற்றம் வீசுகிறது. குடிநீர் மேல்நிலைத் தொட்டி பல மாதங்களாக சுத்தம் செய்யப்படாமல் இருப்பதால், குடிப்பதற்கு வழங்கப்படும் தண்ணீர் மஞ்சள் நிறமாக மாறியுள்ளது. நோயைத் தீர்ப்பதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்‍கு நாள்தோறும் ஏராளமானோர் வருகின்றனர். அவ்வாறு வருவோருக்‍கு பசி தீர்க்‍கும் அட்சய பாத்திரமாக விளங்கிய அம்மா உணவகம் தற்போது ஆட்சியாளர்களின் அவலத்தால் நோயை உண்டாக்‍கும் இடமாக மாறியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00