கன்னியாகுமரியில் கடல் சீற்றம் - சுற்றுலாப் படகுகள் சேவை நிறுத்தம் : நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம்

Jul 2 2022 4:45PM
எழுத்தின் அளவு: அ + அ -

கன்னியாகுமரியில் கடல் சீற்றம் காரணமாக, விவேகானந்தர் பாறைக்கு இயக்கப்படும் சுற்றுலாப் படகு சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச சுற்றுலா மையமான கன்னியாகுமரியில் கடல் நடுவே அமைந்துள்ள திருவள்ளூவர் சிலை மற்றும் விவேகானந்தர் பாறைக்‍கு, பூம்புகார் கப்பல் போக்குவரத்துக்‍ கழகம் சார்பில் சுற்றுலா படகுகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதற்காக ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம். இன்று அதிகாலையில் இருந்தே பூம்புகார் கப்பல் போக்குவரத்து படகு தளத்திற்கு சுற்றுலா பயணிகள் வருகை தந்தனர்.

இந்நிலையில், கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால் 8 மணிக்கு தொடங்க வேண்டிய படகு சேவை தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது. குமரிக்‍கடல் பகுதிகளில் சூறைக்காற்று மற்றும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுற்றுலாப் படகு சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் நீண்ட வரிசையில் காத்திருந்த சுற்றுலாப் பயணிகள், படகு சவாரி செய்ய முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00