சென்னை ரிப்பன் மாளிகை கோபுரத்தில் உள்ள கடிகாரம் பழுது : அம்பத்தூரில் கடிகாரத்தின் பாகங்களை தயாரிக்‍க முடிவு

Jul 2 2022 4:50PM
எழுத்தின் அளவு: அ + அ -

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கோபுரத்தில் உள்ள கடிகாரம் பழுதான நிலையில், அதன் பாகங்கள் அம்பத்தூரில் தயாரிக்‍கப்பட உள்ளதாக அறிவிக்‍கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி ரிப்பன் மாளிகை கோபுரத்தில் 109 ஆண்டு கால பழமையான கடிகாரம் உள்ளது. வரலாற்று சிறப்பு மிக்க இந்த கடிகாரம் 1913-ம் ஆண்டு லண்டனில் தயாரிக்கப்பட்டது. இந்த கடிகாரத்தின் சில பாகங்கள் பழுதடைந்து இருப்பதாக தொழில்நுட்ப பணியாளர்கள் கண்டுபிடித்தனர். எனவே இந்த கடிகாரம் தொடர்ந்து தடையின்றி செயல்படுவதற்கு ஏதுவாக அதில் பராமரிப்பு பணிகள் மற்றும் பழுதுகளை சரிபார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. லண்டனில் தயாரிக்கப்பட்ட இந்த கடிகாரம் தொடர்பான பெரும்பாலான தகவல்கள் தொலைந்துவிட்டன. எனவே பழுதடைந்த உதிரி பாகங்களை உள்ளூரில் இருந்தே பெற்று மாற்றுவதற்கு மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. இதன் உதிரி பாகங்களை போன்ற மாற்று பாகங்களை தயாரிப்பதற்காக அம்பத்தூரில் உள்ள லேத் பட்டறைக்கு இதன் பாகங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. இந்த கடிகாரத்தின் முள்கள் இயக்கும் தண்டு தேய்ந்து விட்டதால் அந்த தண்டும் மாற்றப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00