ராமநாதபுரம்: கடலுக்‍கு மீன் பிடிக்‍கச் சென்ற 2 மீனவர்கள் பலத்த சூறைக்‍காற்றால் மாயம்

Jul 2 2022 4:55PM
எழுத்தின் அளவு: அ + அ -

ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடியில் இருந்து கடலுக்‍கு மீன் பிடிக்‍கச் சென்ற 2 மீனவர்கள் பலத்த சூறைக்‍காற்றால் மாயமாகிய நிலையில், அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி அருகே மங்களேஸ்வரி பகுதியை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் நாட்டுப்படகில் கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். இடமுருகை தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது பலத்த காற்றின் காரணமாக நாட்டுப்படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மலைச் செல்வம், முனியசாமி ஆகிய இரண்டு மீனவர்கள் கடலில் மாயமானார்கள். இதையடுத்து மரைன் போலீசார் அவர்களை கடலில் தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவர் சூறாவளியில் சிக்கி மாயமானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய தமிழ் செய்திகள்

Comment Here
Comments
  • KELVIGAL AAYIRAM

    Mon,Tue,Wed,Thu,Fri,Sat : 18:00

முக்கிய செய்திகள்
சிறப்பு செய்திகள்
கரன்சி நிலவரம்
நாடு இன்றைய விலை
அமெரிக்கா (டாலர்)
ஐரோப்பா (யூரோ)
பிரிட்டன் (பவுண்டு)
ஆஸ்திரேலியா (டாலர்)
சிங்கப்பூர் (டாலர்)
ஹாங்காங் (டாலர்)
தங்கம் விலை நிலவரம்
நகரம்
22 காரட்
24 காரட்
  1கி் 1கி்
சென்னை Rs. 4515.00 RS. 4865.00
மும்பை Rs. 4515.00 RS. 4865.00
டெல்லி Rs. 4515.00 RS. 4865.00
கொல்கத்தா Rs. 4515.00 RS. 4865.00
வெள்ளி விலை நிலவரம்
நகரம் 1 கிராம் 1 கிலோ
சென்னை Rs. 50.10 Rs. 50100.00
மும்பை Rs. 50.10 Rs. 50100.00
டெல்லி Rs. 50.10 Rs. 50100.00
கொல்கத்தா Rs. 50.10 Rs. 50100.00