தூத்துக்குடி மாவட்டத்தில் நலிவடைந்து வரும் பனைத் தொழில் : உடன்குடி பழைய கருப்பட்டி விலை கிலோவிற்கு ரூ. 100 உயர்வு
Jul 2 2022 4:56PM
எழுத்தின் அளவு:
அ +
அ -
அ
தூத்துக்குடி மாவட்டத்தில் பனைத் தொழில் நலிவடைந்து வருவதால் உடன்குடி கருப்பட்டி சந்தையில் பழைய கருப்பட்டியின் விலை கிலோவிற்கு,100 ருபாயும் புதிய கருப்பட்டியின் விலை கிலோவுக்கு 50 ரூபாயும் உயர்ந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி செட்டியாபத்து மாதவன்குறிச்சி நங்கைமொழி உள்ளிட்ட சுமார் 30 கிராமங்களில் பனை மரங்களில் பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சுவது முக்கிய தொழிலாக உள்ளது. இதில் உடன்குடியில் தயாரிக்கப்படும் கருப்பட்டி தமிழகம் மட்டுமின்றி இந்தியா முழுவதும் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில் பனை மரங்கள் பராமரிப்பு இன்றி அழிந்து வருவதாலும் பனை ஏறும் தொழிலாளர்கள் ஏராளமானோர் பனையேறும் தொழிலை கைவிட்டு மாற்று வேலைகளுக்கு சென்று விட்டதாலும் தூத்துக்குடி மாவட்டத்தில் பனைத் தொழில் மெல்ல நலிந்து வருகிறது. குறைந்த அளவிலான பதநீர் இறக்கப்பட்டு கருப்பட்டி காய்ச்சப்படுவதால், அதன் விலை அதிகரித்துள்ளது. கடந்த வாரம் 250 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட உடன்குடி புதிய கருப்பட்டி இன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதே போன்று 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பழைய கருப்பட்டி 400 ரூபாயாகவும் விலை உயர்ந்துள்ளது.